Header Ads

Header ADS

Covide issues increase! கொரொனா பாதிப்பு அதிகரிப்பு


தினசரி உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள்
இந்தியா Vs உலக நாடுகள்

இந்த 9 நாடுகளின் கூட்டுத் தொகையே இதில் இடம்பெற்றுள்ளது

ஒரு கோடியே 29 லட்சத்து 757 மீண்டனர்

7 லட்சத்து 34 ஆயிரத்து 025 பேர் பலி
இன்று ( ஆகஸ்ட்- 10ம் தேதி ) மதியம்: 12;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 26 ஆயிரத்து, 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 7 லட்சத்து 34 ஆயிரத்து 025 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 29 லட்சத்து 757 பேர் மீண்டுள்ளனர்.

ஒரு கோடியே 28 லட்சத்து 92 ஆயிரத்து 479 பேர் மீண்டனர்

இன்று ( ஆகஸ்ட்- 10ம் தேதி ) காலை : 06;55 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 2 கோடியே 16 ஆயிரத்து, 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 7 லட்சத்து 33 ஆயிரத்து 607 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 28 லட்சத்து 92 ஆயிரத்து 479 பேர் மீண்டுள்ளனர்.

தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு

தமிழகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், இன்று(ஆக., 10) முதல் செயல்பட உள்ளன.பயிற்சி பெறுவோர், கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
சாதாரண முக கவசம் அணிய வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒருவர் மட்டுமே, ஒரு கருவியில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இரண்டு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். பயிற்சி பெறுவோரின் உடல் வெப்பநிலை கட்டுக்குள் இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளும், இன்று முதல் செயல்பட உள்ளன.

தமிழகத்தில் தளர்வுடன் ஊரடங்கு: இன்று முதல் அமல்

தமிழகத்தில், தளர்வில்லாத முழு ஊரடங்கு, நேற்று நிறைவடைந்தது. இன்று(ஆக.,10) முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.நேற்று மாநிலம் முழுதும், எவ்வித தளர்வும் இல்லாத, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. வாகனங்கள் எதுவும் இயங்கவில்லை. இதனால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. நேற்று பொதுமக்கள் ஒத்துழைப்புடன், முழு ஊரடங்கு நிறைவடைந்த நிலையில், இன்று தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

கர்நாடகாவில் குணமடைந்தவர்கள் விகிதம் 53 சதவீதமானது

கர்நாடகாவில் இதுவரை மொத்தம் 93,908 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 53 சதவீதமாக உயர்ந்துள்ளது.


கேரளாவில் இதுவரை 21,836 பேர் குணமடைந்தனர்

கேரளாவில் இதுவரை 21,836 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 63.5 சதவிகிதமானது.இன்றைய தேதியில் கேரளாவில் 1,49,357 பேர் கண்காணிப்பில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,745 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. 12,347 பேர் இன்னும் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இவ்வாறு மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


சவுதியில் கொரோனாவில் இருந்து மேலும் 1,599 பேர் மீட்பு

சவுதியில் கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 1,599 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.சவுதியில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மேலும் 1,599 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் தொற்று பாதிப்புகளில் இருந்து 2,52,039 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது 33,484 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 1,816 பேர் அதிதீவிர சிகிச்சையில் உள்ளனர்.

தெலுங்கானா: செப்., இறுதிக்குள் தொற்று பாதிப்பு விகிதம் குறையும்

தெலுங்கானாவில் செப்.,மாத இறுதிக்குள் கொரோனா தொற்றின் பாதிப்பு விகிதம் (Curve Flatten) குறையலாம் என சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக பொது சுகாதார இயக்குனர் டாக்டர்.ஜி சீனிவாச ராவ் கூறுகையில், கொரோனா தொற்று பாதிப்புகள் GHMC யின் கீழ் குறைந்து வருவதால், ஊக்கமளிக்கும் அறிகுறிகள் உள்ளன. ஆக.,இறுதியில் ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் வைரஸ் பலவீனமடையும் என மதிப்பீடுகளில் தெரியவந்தது. தற்சமயம், ரங்காரெட்டி, மேட்சல், வாரங்கல் போன்ற மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. எங்கள் மதிப்பீடுகளின் அடிப்படையில், செப்., இறுதிக்குள், கொரோனா தொற்று நோய் மாநிலத்தில் அதன் போக்கை இயக்கியிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

டில்லியில் கொரோனா பாதிப்பு உயர வெளி நோயாளிகளும் காரணம்

டில்லியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகளில் வெளி நோயாளிகள் அதிகமாக இருப்பதும் காரணம் என சுகாதாரதுறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் செப்., முதல் பள்ளிகள் திறப்பது அவசியம் : போரிஸ் ஜான்சன்

பிரிட்டனில் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் அவசியம் திறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.மாணவர்களின் பள்ளிப் படிப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. இனி ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும் பள்ளிகள் மூடல் என்பது கடைசி பட்சமாக இருக்கும். மாணவர்கள் தங்கள் கல்வியை தவறவிட்டால் நாடு பெரிய பிரச்னைகளை எதிர்கொள்ளும். எனவே கொரோனா பரவல் முற்றிலும் குறையாமல் இருந்தாலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் படிப்பினை தொடர வேண்டும்' இவ்வாறு போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

ரஷ்யாவில் குணமடைந்தவர்கள் விகிதம் 78 சதவீதம்

ரஷ்யாவில் இதுவரை 6.93 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதையடுத்து அங்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 78 சதவிகிதமாக உள்ளது.இந்நிலையில் அந்நாட்டின் கமேலியா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருந்து வரும் ஆக., 12ம் தேதி பதிவு செய்யப்பட உள்ளது. பதிவுக்கு பின் 1,600 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் ஆரம்ப கட்ட கொரோனா சோதனை தொடக்கம்

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசிக்கான ஆரம்ப கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசிக்கான ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனை சிங்கப்பூரிலும் தொடங்கப்பட்டு உள்ளது.முதல் தடுப்பூசிகள் அடுத்த வாரம் தன்னார்வலர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

நேபாளத்திற்கு வென்டிலேட்டர்கள் வழங்கியது இந்தியா

நேபாளத்திற்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.2.8 கோடி மதிப்பிலான வென்டிலேட்டர்களை இந்தியா வழங்கியது.நேபாள தலைநகர் காத்மண்டில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அந்நாட்டிற்கு, 10 வென்டிலேட்டர்கள் இந்தியா சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.2.8 கோடி. இரு நாடுகளுக்கு இடையேயான நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டதாக இந்திய தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா: கொரோனா மீட்பு விகிதம் 70 சதவீதமாக உயர்வு

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீட்பு விகிதம் 70 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 7 லட்சம் கொரோனா பரிசோதனைகள்

இந்தியாவில் ஒரே நாளில் 7 லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன; கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் சதவீதம் 68.78 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா, காங்., மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. மேலும், அங்கு இதுவரை 94,100 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 989 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,08,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 397 பேருக்கும், திருவள்ளூரில் 396 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 393 பேருக்கும், தேனியில் 360 பேருக்கும், தூத்துக்குடியில் 251 பேருக்கும், திருவண்ணாமலையில் 222 பேருக்கும், ராணிப்பேட்டையில் 219 பேருக்கும், கோவையில் 217 பேருக்கும், விருதுநகரில் 193 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,061 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 95,161 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று மதுரையில் 463 பேரும், காஞ்சிபுரத்தில் 431 பேரும், செங்கல்பட்டில் 356 பேரும், விருதுநகரில் 338 பேரும், திண்டுக்கலில் 327 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 6,020 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்று (ஆக.,09) ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 5,994 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2.38 லட்சத்தை கடந்தது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,994 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,974 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 20 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 129 ஆய்வகங்கள் (அரசு-61 மற்றும் தனியார்-68) மூலமாக, இன்று மட்டும் 70,186 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 32 லட்சத்து 25 ஆயிரத்து 805 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 119 பேர் உயிரிழந்தனர். அதில், 34 பேர் தனியார் மருத்துவமனையிலும், 85 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 4,927 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,336 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.