Header Ads

Header ADS

சென்னைக்கு வந்தது கோவிஷீல்டு..300 பேருக்கு செலுத்தும் வகையில் ஏற்பாடு..!



சென்னைக்கு வந்தது கோவிஷீல்டு..300 பேருக்கு செலுத்தும் வகையில் ஏற்பாடு..!


கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்காக, 300 பேருக்கு செலுத்தும் வகையில் கோவிஷீல்டு மருந்துகள் புனேவில் இருந்து சென்னை வந்துள்ளன.


கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தை, மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 1600 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 150 பேருக்கும், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் 150 பேருக்கும் செலுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது. கோவிஷீல்டு தடுப்பு மருந்து பரிசோதனை அடுத்த வாரம் துவங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தடுப்பு மருந்து பரிசோதனையில் ஏதேனும் பின்விளைவுகள் ஏற்படுகிறதா என்பது குறித்த ஆராய்ச்சி, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகிறது

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.