கைலாசா பெண்களைத் திருமணம் செய்துகொடுங்கள்’ - வைரலாகும் 90ஸ் கிட்ஸ் எழுதிய கடிதம்!

’கைலாசா பெண்களைத் திருமணம் செய்துகொடுங்கள்’ - வைரலாகும் 90ஸ் கிட்ஸ் எழுதிய கடிதம்!
திருமணம் ஆகாமல் தவித்துவரும் எங்களுக்குக் கைலாசா நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்துவைக்குமாறு 90ஸ் கிட்ஸ்கள் நித்தியானந்தாவுக்கு எழுதியுள்ள கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சர்ச்சை சாமியாரான நித்யானந்தா தலைமறைவாகியுள்ளார். அவர் எங்கு மறைந்துள்ளார் எனும் விபரங்கள் உறுதியாகத் தெரியாத நிலையில், கைலாசா நாட்டைத் தான் உருவாக்கியுள்ளதாக அறிவித்தார். அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் கைலாசா வங்கி, கைலாசா நாணயம், கைலாசா பாஸ்போர்ட் என்று அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவ்வபோது சமூக வலைத்தளங்களில் நித்யானந்தாவுக்கு எழுதப்படும் கடிதங்களுக்கு அவர் பதில் அளிப்பதுண்டு. இதற்கு முன்பு கைலாசாவில் உணவகம் தொடங்க வேண்டும் என்று ஒருவர் மதுரை ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் விடுத்த கோரிக்கைக்குப் பதில் அளித்த நித்யானந்தா, திருவண்ணாமலை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
No comments