இலங்கையுடனான உறவுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது, ராஜபக்சவுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி தகவல்

இலங்கையுடனான உறவுக்கு தமது அரசு சிறப்பு முக்கியத்துவம் கொடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
காணொலி மூலம் டெல்லியிலிருந்தபடி இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் மோடி ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய பிரதமர், இந்தியா-இலங்கை இடையேயான உறவு, பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையானது எனவும், அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை மற்றும் சாகர் திட்ட கொள்கையின்படி இலங்கையுடனான உறவுக்கு தமது அரசு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கிறது எனவும் மோடி தெரிவித்தார்.
அப்போது பேசிய ராஜபக்ச, கொரோனா காலத்தில் பிற நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்பட்டு வருவதாக பாராட்டினார்.
No comments