எல்லையில் வாலாட்டினால் சீனாவுக்கு பொருத்தமான பதிலடி- பிபின் ராவத்

எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன்பாக அவர் இவ்வாறு கூறினார். அசல் கட்டுப்பாட்டு எல்லையில், மாற்றம் செய்ய நினைக்கும் சீனாவின் முயற்சிகளை முறியடிக்க ராணுவம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் கூறினார். எல்லையில் வாலாட்டினால் சீனாவுக்கு பொருத்தமான பதிலடி கொடுக்கப்படும் என பிபின் ராவத் திட்டவட்டமாக தெரிவித்தார்.
No comments