தங்கம் விலை உயர்வு..!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்துள்ளது.
கிராம் தங்கம் விலை நேற்று 4 ஆயிரத்து 919 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 39 ஆயிரத்து 352 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை 18 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 937 ரூபாய்க்கும், சவரன் தங்கம் விலை 144 ரூபாய் அதிகரித்து 39 ஆயிரத்து 496 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதேபோல் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து 70 ஆயிரத்து 200 ரூபாயாக விற்பனையாகிறது.
No comments