Header Ads

Header ADS

பார்சிலோனா அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என லியோனல் மெஸ்ஸி அறிவிப்பு


பார்சிலோனா அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என லியோனல் மெஸ்ஸி அறிவிப்பு


அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனா கிளப் அணியிலேயே நீடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய கால்பந்தாட்டத் தொடரில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, பார்சிலோனா அணியில் இருந்து விலக மெஸ்சி விருப்பம் தெரிவித்து இருந்தார்.


ஆனால், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் மெஸ்சியின் ஒப்பந்தம் உள்ளதாகவும், உடனடியாக அணியில் இருந்து விலகினால் 6 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டி இருக்கும் எனவும் அணி நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில், சட்ட சிக்கல்களைத் தவிர்க்கும் நோக்கில் தான் அணியிலிருந்து விலகப்போவதில்லை எனவும், எப்போதும் அணிக்கான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புவதாகவும் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.