Header Ads

Header ADS

இந்திய வீரர்கள் எல்லைத் தாண்டி வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி, தங்களை அச்சுறுத்தியதாக சீனா குற்றச்சாட்டு


இந்திய வீரர்கள் எல்லைத் தாண்டி வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி, தங்களை அச்சுறுத்தியதாக சீனா குற்றச்சாட்டு

கிழக்கு லடாக் பகுதியில் இந்திய வீரர்கள் எல்லையைத் தாண்டி வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி, தங்களை அச்சுறுத்தியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

கிழக்கு லடாக் பகுதியில் பாங்காங் ஏரியின் தென் கரையிலும், ஷென்பாவ் மலைப் பகுதியிலும் எல்லையைக் கடந்து இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைந்ததாக சீனா குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் ஷாங் ஷூலி, இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தி தங்களை அச்சுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ராணுவத்தின் அத்துமீறலால், சீன ராணுவத்தினர் எதிர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் சீனாவின் குற்றச்சாட்டுக்கு இந்தியத் தரப்பில் இதுவரை பதிலளிக்கப்படவில்லை.

இந்தியா, சீனா இடையே கடந்த 45 ஆண்டுகளாக எந்த துப்பாக்கிச் சண்டையும் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லடாக் பிரச்னை மிகவும் தீவிரமானது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் காணொலி வாயிலாக பங்கேற்று பேசிய அவர்,கடந்த 30 ஆண்டுகளாக சீனாவுடன் எல்லையில் எந்தப் பிரச்னையும் இல்லாததால் அந்நாட்டின் 2வது பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்ததாக தெரிவித்துள்ள ஜெய்சங்கர், இதன்மூலமே இருதரப்பிலும் அமைதியும், உறவும் நீடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். லடாக் பிரச்னையில் அரசியல் மட்டத்தில் ஆழமான உரையாடல்கள் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.