Header Ads

Header ADS

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு உதவியாக சிறப்பு குழு அமைப்பு


காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு உதவியாக செயல்படுவதற்காக அக்கட்சியில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து வரும் சோனியா காந்திக்கு செயல்பாடு மற்றும் நிர்வாக விவகாரங்களுக்கு உதவியாக இருப்பதற்காக அக்கட்சியில் சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கான முடிவு கடந்த ஆகஸ்டு 24ந்தேதி நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அந்த கூட்டத்தில், குழு உறுப்பினர்களாக, ஏ.கே. அந்தோணி, அகமது பட்டேல், கே.சி. வேணுகோபால், முகுல் வாஸ்னிக் மற்றும் ரன்தீப் சிங் சுர்ஜீவாலா ஆகிய 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அடுத்த கூட்டம் நடைபெறும் வரை இந்த குழுவின் நடவடிக்கைகள் தொடரும். இதனை அக்கட்சி சார்பில் வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.