ஆயுதமேந்திய இந்திய ராணுவம்.! போர் பதற்றத்தால், முழு உஷார்.!

கிழக்கு லடாக்கில், சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கைகளால், எல்லைப் பதற்றம் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, போபர்ஸ் இலகுரக பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன், இந்தியா தனது துருப்புகளை முழு உஷார் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டில், டோக்லாம் எல்லையில் அத்துமீறிய சீன ராணுவம், நடப்பாண்டின் மார்ச் மாதம் இறுதி வாரம் முதல், லடாக் எல்லைப் பகுதியில், தொடர் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, பங்காங் திசோ எரிக்கரை, சுசூல் உள்ளிட்ட பகுதிகளில், போர் பதற்றம் நிறைந்தவையாக மாறியிருக்கின்றன.
லடாக்கில் மட்டுமின்றி, அருணாச்சல் மற்றும் டோக்லாம் எல்லைப் பகுதிகளையும் சீனா, குறிவைத்திருக்கிறது. இதனையும் நன்றாகவே அறிந்திருக்கும், இந்திய ராணுவம், அங்கு, படைகளை குவித்து, சீனாவின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து செக் வைத்திருக்கிறது.
இந்நிலையில், கிழக்கு லடாக்கில், போபர்ஸ் நிறுவன இலகுரக பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய, படையணிகளை இந்திய ராணுவம் குவித்துள்ளது.
போபர்ஸ் இலகுரக பீரங்கிகளால், தாழ்வான மற்றும் அதிர் உயர் இலக்குகளை குறிவைத்து எளிதாக தாக்க இயலும். மேலும், இந்த பீரங்கிகளை, ஓரிடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு, நகர்த்துவதும் எளிது.
No comments