Header Ads

Header ADS

"உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஆயுதம் அமெரிக்காவிடம் உள்ளது" - அதிபர் டிரம்ப்


உலகில் யாரிடமும் இல்லாத ரகசிய அணு ஆயுதம் உருவாக்கி உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.

அந்நாட்டின் பத்திரிகையாளர் பாப் உட்வர்ட் டொனால்ட் டிரம்ப் குறித்து Rage என்ற புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.இந்த புத்தகம் வருகிற 15 ந்தேதி வெளியிடப்பட உள்ளது. புத்தகத்தில் இருக்கும் சில தகவல்களை சி.என்.என் செய்தி வெளியிட்டு உள்ளது.அதில் புத்தகத்திற்காக உட்வர்ட்டுடன் டிரம்ப் பேசிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

அதில், இதற்கு முன்னர் யாரிடமும் இல்லாத அணு ஆயுத த்தை உருவாக்கி உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். ரஷிய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி கூட இதற்கு முன்னர் கேள்விப்படாத "பொருள்" அமெரிக்காவில் உள்ளது என்றும், அந்த ஆயுதம் 2018 ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க அணு ஆயுதக் களஞ்சியத்துடன் சேர்க்கப்பட்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.