Header Ads

Header ADS

சீன ராணுவ நிலைகளை விட உயரமான சிகரங்கள் இந்தியா வசமானது



கிழக்கு லடாக்கில் பிங்கர் 4 என்ற இடத்தில் சீன ராணுவம் இருக்கும் இடத்தை விட உயரமான சிகரங்களை இந்திய ராணுவம் கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பாங்காங்சோ ஏரியின் தெற்கு கரைப் பகுதியில் இருந்த சிகரங்களை இந்திய ராணுவம் கைப்பற்றியது. அந்த நடவடிக்கையின் போதே பிங்கர் 4 இடத்தில் உயரமான சிகரங்களையும் கைப்பற்றியதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

சீன ராணுவம் இருக்கும் இடத்தை விட உயரமான சிகரங்களை கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது. பிங்கர் 4 கடந்த ஏப்ரல், மே மாதம் முதலே சீன ராணுவத்தின் வசம் இருப்பதுடன், அங்கிருந்து படைகளை விலக்கவும் மறுத்து விட்டது. இதற்கிடையே இந்தியா - சீனா ராணுவத்தின் கமாண்டிங் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.