Header Ads

Header ADS

14 வயதில் வற்புறுத்தி பலாத்கார காட்சியால் நடிக்க வைக்கப்பட்டதால்..!


14 வயதில் வற்புறுத்தல்.. அந்த மாதிரி நடிச்சிட்டு பள்ளிக்கு போன நடிகை…! ரியல் வீடியோ வெளியானதால் விபரீதம்

சமூக வலைதளங்களில் பரவி வரும் தனது ஆபாச காட்சிகளை நீக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளாததால் நடிகை சோனா ஆபிரகாம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 14 வயதில் வற்புறுத்தி பலாத்கார காட்சியால் நடிக்க வைக்கப்பட்டதால் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து நடிகை சோனா ஆபிரகாம் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

14 வயதில் “பார் சேல்” என்ற மலையாளப்படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சோனா ஆபிரகாம். இவர் அண்மையில் சமூக வலைதளங்களில் உள்ள தனது ஆபாச வீடியோ காட்சிகளை நீக்க கோரி புகார் அளித்திருந்த நிலையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுக்கின்றது.

இந்த விபரீத செயலில் இருந்து அவரை பெற்றோர் மீட்ட நிலையில், தனக்கு நேர்ந்த அவமானம் குறித்தும், சமூக வலை தளங்களில் தன்னுடைய ஆபாச காட்சி வெளியான பின்னணி குறித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் 14 வயதில் தான், காதல் சந்தியாவுக்கு தங்கையாக, பார் சேல் என்ற மலையாள படத்தில் நடித்ததாகவும், படத்தில் தான் பலாத்காரம் செய்யப்படுவதை பார்த்ததும் சகோதரியான காதல் சந்தியா தற்கொலை செய்து கொள்வது போல படத்தின் இயக்குனர் சதீஷ் அனந்தபுரி படம் எடுத்திருந்தார் என்கிறார் சோனா.


150 பேர் முன்னிலையில் பலாத்கார காட்சியை படமாக்க இயக்குனர் சதீஷ் அனந்தபுரி முடிவு செய்திருந்த நிலையில் தான் நடிக்க மறுத்ததால், தன்னை வற்புறுத்தி இயக்குனர் அலுவலகத்திற்குள் வைத்து பலாத்கார காட்சியை படமாக்கியதாகவும் , அந்த காட்சி குறித்த புரிதல் ஏதும் அப்போது தனக்கு இல்லாததால், 10-ம் வகுப்பு படித்து வந்த தான் மறு நாள் வழக்கம் போல பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டதாகவும், அந்த படம் வெளியான போது கூட முறையாக எடிட் செய்யப்பட்டு ஆபாச காட்சிகள் இல்லாமல் வெளியானதாக சுட்டிக்காட்டியுள்ளார் சோனா ஆபிரகாம்.

ஆனால் படம் வெளியாகி 2 ஆண்டுகள் கழித்து எடிட் செய்யப்படாத ஆபாச காட்சிகளை சமூக வலைதளங்களில் யாரோ பரப்பி விட்டுள்ளதாகவும், அது பல்வேறு சமூக வலைதளங்களிலும் பரவிவருவதாக சில மாதங்களுக்கு முன்பு தனது கவனத்துக்கு தெரியவந்ததும். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்ததோடு அதனை, நீக்க நடவடிக்கை எடுக்க கோரி கேரள முதல்வர் , டிஜிபி, சைபர் கிரைம் காவல்துறையினர் என அனைவரையும் சந்தித்து தான் புகார் அளித்ததாக சோனா அபிரகாம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த வீடியோக்களை நீக்க இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அந்த வீடியோக்கள் பல்வேறு சமூக வலைதளங்களிலும் ஆபாச இணையதளங்களிலும் தொடர்ந்து பரவிவருவதால் பல தரப்பில் இருந்தும் தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஏற்பட்ட அவமானத்தால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக சோனா ஆபிரகாம் வேதனை தெரிவித்துள்ளார்

மலையாள திரையுலக சங்கமான அம்மா வில் நடிகைகளுக்கு பாதுகாப்பில்லை என்று நடிகை பத்மபிரியா, ரேவதி, பார்வதி ஆகியோர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் 14 வயது சிறுமியை பலாத்கார காட்சியில் வற்புருத்தி நடிக்க வைத்த இயக்குனர் சதீஷ் அனந்தபுரிக்கும், தணிக்கையில் நீக்கப்பட்ட ஆபாச காட்சிகளை வெளியிட்ட பார் சேல் படக்குழுவை சேர்ந்தவர்களுக்கும் எதிராக பலத்த கண்டன குரல் எழுந்து வருகின்றது.

இதற்க்கிடையே பெற்றோர்களின் பணத்தாசையால் அந்த மாதிரி காட்சியில் ஒப்புக்கொண்டு தான் நடிக்க வைக்கப்பட்டதை நடிகை சோனா ஆபிரகாம் வசதியாக மறைத்து புகார் அளித்துள்ளதாகவும், பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியான அந்த வீடியோவை பரப்பிவிடுவது யார் ? என்று புகாரில் குறிப்பிடவில்லை என்றும் போலீஸ் தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

அதே நேரத்தில் பெண்களை போகபொருளாக மட்டும் சித்தரித்து படம் எடுக்கும் இயக்குனர்களிடம், புதுமுகங்கள் சிக்கினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு தற்போது அவதியுறும் சோனாவின் வாழ்க்கையும் ஒரு எச்சரிக்கை பாடம்..!

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.