Header Ads

Header ADS

ஐ.பி.எல் சூதாட்டம்... போலீசாரின் சோதனையில் 4 கோடியே 20 லட்சம் ரூபாய் பணம் சிக்கியது

ராஜஸ்தானில் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் ஐ.பி.எல் சூதாட்டம்... போலீசாரின் சோதனையில் 4 கோடியே 20 லட்சம் ரூபாய் பணம் சிக்கியது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்வைத்து கோவில்களின் பெயரால் 30 ஆன்லைன் மற்றும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் சூதாட்டம் நடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 4 கோடியே 20 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 20 மொபைல் போன்கள், கணினி உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கோடிக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியானதையடுத்து போலீசார் அந்த வீட்டை முற்றுகையிட்டனர்.






No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.