Header Ads

Header ADS

நடிகையை கற்பழித்த புகாரில் சிக்கிய இயக்குனர் அனுராக் காஷ்யப்பிடம் போலீசார் 8 மணி நேரம் விசாரணை



நடிகையை கற்பழித்த புகாரில் சிக்கிய இயக்குனர் அனுராக் காஷ்யப்பிடம் போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்தவர், பிரபல இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப். இவர் மீது இந்தி நடிகை பாயல் கோஷ் மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு புகார் அளித்தார். 2013-ம் ஆண்டு படவாய்ப்பு கேட்டு சென்றபோது, அவர் தன்னை கற்பழித்ததாக புகாரில் கூறியிருந்தார்



எனினும் போலீசார் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்காததால் நடிகை பாயல் கோஷ் மத்திய சமூக நீதித்துறை மந்திரி ராம்தாஸ் அத்வாலேயுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து முறையிட்டார். அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.


இயக்குனரிடம் விசாரணை

இந்தநிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு போலீசார் நேற்று முன்தினம் சம்மன் அனுப்பி இருந்தனர்.

அதனை ஏற்று நேற்று காலை 10.30 மணிக்கு அவர் விசாரணைக்காக வெர்சோவா போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவருடன் அவரது வக்கீல் பிரியங்கா கிமானியும் வந்து இருந்தார். இயக்குனரிடம் பெண் போலீஸ் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாலை 6.30 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார். இதனால் 8 மணி நேர விசாரணைக்கு பிறகு அனுராக் காஷ்யப் வீடு திரும்பினார்.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.