Header Ads

Header ADS

உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை


உத்தரபிரதேசத்தில் மேலும் ஒரு இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை

உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸ் சம்பவம் போன்று பல்ராம்பூர் அருகே ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர்.

பல்ராம்பூர் அருகே வேலைக்குச் சென்ற 22 வயது இளம்பெண்ணை ஒரு கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அத்துடன் அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கி உள்ளனர். செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. பலத்த காயமடைந்த அந்த பெண்ணை லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.