Header Ads

Header ADS

உ.பி. இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை; நீதி கேட்டு தி.மு.க. மகளிர் அணி சார்பில் போராட்டம்


திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்களின் பாதுகாப்புக்காக சிறப்பு தனி நீதிமன்றம் மாவட்டம் தோறும் ஏற்படுத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தி.மு.க மகளிர் அணி பேரணியை தொடங்கி வைத்துப் பேசிய அவர், உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை நியாயமாக நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றார்.

அதனைத் தொடர்ந்து திமுக மகளிரணி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றது. அதில் பங்கேற்ற திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.