Header Ads

Header ADS

அரைநிர்வாண உடலில் சிறுவர்களை வைத்து சித்திரம் ரெஹனா பாத்திமா மீது வழக்கு


கேரளாவின் பெண் சமூக ஆர்வலர் ரெஹனா பாத்திமா அரைநிர்வாணக் கோலத்தில் படுத்திருக்க அவர் உடலில் குழந்தைகள் ஓவியம் வரையும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரவாகி வருகிறது.

இதையடுத்து சிறுவர்களை ஆபாச வீடியோவுக்கு பயன்படுத்தியதாக ரெஹனா பாத்திமா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் பத்தினம் திட்டா போலீசார் வழக்குப் பதிவு செய்யவும் ஆலோசித்து வருகின்றனர் .

ஆனால் இந்த வீடியோவை கலைநயத்துடன் பார்க்க வேண்டும் என்று ரெஹனா பாத்திமா தெரிவித்துள்ளார். சபரிமலையில் தடையை மீறி நுழைய முயன்று போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய ரெஹனா பாத்திமா, தற்போது வெளியான வீடியோ மூலம் சட்டச்சிக்கலுக்கு ஆளாகியுள்ளார்.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.