ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற நடிகை குஷ்பு கைது

சிதம்பரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற நடிகை குஷ்பு கைது
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக செல்ல முயன்றபோது, பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பூவை, சென்னையை அடுத்த ஈசிஆர் முட்டுக்காட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரத்தில் திருமாவளவனைக் கண்டித்து பாஜக நடத்த இருந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனால் அங்கு தடையை மீறி போராட்டம் நடத்துவதற்காக, நடிகை குஷ்பூ சென்னையில் இருந்து காரில் கிழக்கு கடற்கரை வழியாகப் புறப்பட்டுச் சென்றதால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
வலுக்கட்டாயமாக தன்னுடைய பயணம் பாதியில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அமைதி வழிப் போராட்டத்திற்கு அதிமுக அரசு அனுமதி மறுப்பது ஏன் என்றும் தமது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பூ பதிவிட்டுள்ளார்.
No comments