பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பந்து வீச்சு

ஐபிஎல் கிரிக்கெட்;
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றது.
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி அமர்க்களமாக தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடையில் ஏற்பட்ட சறுக்கல், அனுபவ வீரர்களின் சொதப்பலால் தள்ளாடியதுடன் முதல்முறையாக பிளே-ஆப் சுற்று வாய்ப்பையும் பறிகொடுத்தது. 13 ஆட்டங்களில் 5 வெற்றி, 8 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணி இன்று தனது கடைசி லீக்கில் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது.
பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றை எட்ட வேண்டும் என்றால் இந்தப் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும். இதனால், ரசிகர்கள் மத்தியில் இந்தப் போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற கேப்டன் டோனி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது
No comments