தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டுமென பெரும்பாலான பெற்றோர்கள் கருத்து

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க வேண்டுமென பெரும்பாலான பெற்றோர்கள் கருத்து
தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை திறக்கப்படுவது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
கருத்துக் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டும் என்றே கருத்து கூறியுள்ள நிலையில், மழைக்காலத்தில் தொற்று நோய்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பள்ளிகளை திறக்கலாம் என்றும், படிப்பை விட குழந்தைகளின் உயிரே முக்கியம் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.
பெற்றோரின் கருத்துகள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
No comments