பள்ளிகள் திறப்பு எப்போது? இன்று கருத்துக் கேட்பு கூட்டம்

பள்ளிகள் திறப்பு எப்போது? இன்று கருத்துக் கேட்பு கூட்டம்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகங்களிடம் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.
கொரோனா பரவலைத் தொடர்ந்து மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், 9ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை வகுப்புகளை வரும் 16ந் தேதியன்று தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பெற்றோர் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் பெற்றோரிடம் பள்ளிகளைத் திறப்பது பற்றிய கருத்துக் கேட்புப் படிவம் வழங்கப்பட்டு, மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்புவது குறித்த பதிலைத் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் படிவங்கள் பள்ளிகள் மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பெரும்பான்மையான கருத்துகளின் அடிப்படையில், உரிய ஆலோசனை மேற்கொண்டு பள்ளிகளைத் திறப்பது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
No comments