Header Ads

Header ADS

Today Head line News


பள்ளி மாணவர்கள் 

மாணவ மாணவியர்களின் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் மரணமடைந்த பட்சத்தில் இருக்கும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ , மாணவிகளுக்கு ரூபாய். 75,000 கல்வி மற்றும் பராமரிப்பு செலவுக்காக வங்கியில் நிரந்தர இருப்பாக நமது தமிழ் நாடு அரசு வழங்க உள்ளது.

ஆகையால் பெற்றோர்களில் யாரேனும் ஒருவர் இல்லாத பட்சத்தில் இருக்கும் மாணவ கண்மணிகள் அவரவர் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சான்றிதழ் பெற்றுக்கொண்டு அவர்களது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அல்லது கிராம நிர்வாக அலுவலர்களிடம் வழங்கி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
..................

இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கியை இணைத்ததால் ஊழியர்களுக்கு வேலை பளு அதிகம் இருக்கும் போலிருக்கிறது

அதனால் அவர்களுடைய கோபத்தை வாடிக்கையாளர்களிடம் காட்டுவது அநாகரிகமான செயல். இன்று 15-02-21 தேதி மதியம் நான் மதுரை புதூர் இந்தியன் வங்கிக்கு சென்றுருந்தேன். அங்கு என் நண்பர் ஒருவர் வந்தார். என்னிடம் அவர் ஒரு வாரமாக இந்தியன் வங்கி ATM சென்டர் அனைத்தும் மூடியிருப்பதால் வங்கியில் நேரடியாக என் அக்கௌன்ட்லிருந்து பணம் எடுக்க வந்தேன் என்று கூறி witdrawal slip fill up பண்ணி pass book உடன் கவுண்டரில் கொடுத்தார். கவுண்டரில் இருந்த ஆண் ஊழியர் காசோலை இருந்தால் தான் பணம் தருவேன் என்று கூறி பணம் தர மருத்து விட்டார்.அப்போது வங்கி மேலாளர் இல்லாததால் என் நண்பர் உதவி மேலாளரை அணுகி கேட்டார். அவரும் காசோலை இருந்தால் தான் பணம் தர முடியும் என்று கூறினார். என் நண்பருடைய வீடு மிக தொலைவில் இருப்பதாகவும் அவரிடம் அவர் Senior Citizen என்றும் எமெர்ஜெண்சி செக் ஒன்று வழங்கினால் அதில் fill up செய்து தருவதாகவும் பணம் தந்து உதவுமாறு கேட்டார். அதற்கு அந்த உதவி மேலாளர் வீட்டிற்கு போய் செக் எடுத்து வந்து கொடுத்தால் தான் பணம் கொடுக்க முடியும் என்று அந்த சீனியர் சிட்டிசனை பார்த்து சத்தம் போட்டார். அரசு வங்கிகளின் நிலை இதுதான். அரசுக்கும் வங்கிக்கும் கெட்ட பெயர் வருவது இவர்களை போல் அதிகரிகளால் தான். நம் பிரதம மந்திரியும் நிதி மந்திரியும் என்னதான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் மரியாதையாக நடந்து கொள்ளவேண்டுமென்று நினைத்தாலும் இந்த மாதிரி அதிகாரிகளும் ஊழியர்களும் இருந்தால் என்ன செய்வது மோகன்.

.....................

இன்று முதல் வாகனங்களுக்கு FASTag கட்டாயம்... தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்?!*

*இன்று(16.02.2021) முதல் இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் FASTag கட்டாயமாக்கப்பட்டுள்ளது. FASTag இல்லாத வாகனங்கள் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்தினால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு சுங்கச்சாவடியில் ஒரு காருக்கு 55 ரூபாய் கட்டணம் என்றால் FASTag இல்லாத வாகனங்கள் 110 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். அதனால் நான்கு சக்கரம் மற்றும் அதற்கு மேற்பட்ட சக்கரங்கள் கொண்ட வாகனங்களைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் FASTag ஸ்டிக்கரைத் தங்கள் வாகனங்களில் அவசர அவசரமாகப் பொருத்திவருகிறார்கள்.*


*1. RFID எனப்படும் ரேடியோ அதிர்வெண் அடையாளத் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த FASTag அட்டைகளை, காரின் விண்ட்ஷீல்ட்டில் ஒட்ட வேண்டும். டோல்பிளாசாக்களின் அருகே, அதாவது 20-25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும்போது, அங்கேயுள்ள ரேடியோ அதிர்வெண் தொழில்நுட்பச் சாதனம், FASTag மூலம் வாகன விவரங்களை சில நொடிகளில் ரீட் செய்து, வாகனங்கள் முன்னே செல்வதற்கு அனுமதிக்கும். இதனால் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கவேண்டிய அவசியமோ, சில்லறைக்காக காத்திருக்கவேண்டிய அவசியமோ இல்லை.*

*2. மொபைல் ரீசார்ஜ் போல, FASTag அட்டைக்குக் குறைந்தபட்சம் நூறு ரூபாயிலிருந்து அதிகபட்சம் பத்தாயிரம் வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பல்வேறு தனியார் வங்கிகள், PAYTM உள்ளிட்ட வாலட்கள் மூலமும் இந்த FASTag அட்டைகளைப் பெறலாம். சுங்கச்சாவடியைக் கடந்து பணம் டெபிட் செய்யப்பட்டதும் எஸ்எம்எஸ் மூலம் எவ்வளவு ருபாய் எடுக்கப்பட்டது என்கிற விவரம் வந்துவிடும்.*

*3. வாகனத்தில் FASTag இருக்கிறது. ஆனால், சுங்கச்சாவடியில் அது வேலை செய்யவில்லை என்றால் அங்கேயிருக்கும் RFID ரீடரில் பிரச்னை இருக்கலாம். இதுபோன்ற நேரங்களில் வாகன ஓட்டுநர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்காமல் அவர்களை வெளியேசெல்ல அனுமதிக்கவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.*

*4. சில டோல் பிளாஸாக்களில் ஸீரோ டோல் நடைமுறையில் உள்ளது. உதாரணத்துக்கு சென்னை மேடவாக்கத்தில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலைக்கு செல்லவேண்டும், அல்லது கிழக்கு கடற்கரைச் சாலையில் இருந்து மேடவாக்கம் செல்லவேண்டும் என்றால் அதற்கு ஸீரோ டிக்கெட் வாங்கினால் போதும். கட்டணம் செலுத்தவேண்டியதில்லை. 25 நிமிடங்களுக்குள் ஒரு டோலில் இருந்து இன்னொரு டோலை அந்த வாகனம் கடந்துவிடவேண்டும் என்பது விதி. ஆனால், இப்போதைய FASTag முறையில் பணம் செலுத்தும் வழியில் வந்தால் மட்டுமே இந்த ஸீரோ டிக்கெட் முறை செல்லும். FASTag லைனில் வந்தால் கட்டணம் தானாக டிபெட் ஆகிவிடும்.*

*5. நாம் ஒரு பயணம் மேற்கொள்கிறோம் என்றால் அதற்கு ஏற்றபடி FASTag ஆக்டிவேட் செய்துவைத்திருக்கும் அக்கவுன்டில் பணத்தை பேலன்ஸ் வைத்திருக்கவேண்டும். நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 46 கிமீட்டருக்கும் ஒரு டோல் கேட் இருக்கிறது. கார்களைப்பொருத்தவரை 50 ரூபாயில் இருந்து 90 ரூபாய் வரை டோல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு தங்கநாற்கரச் சாலையைப் பயன்படுத்தி சென்னையில் இருந்து பெங்களூரு சென்றால் டோல் கட்டணம் கிட்டத்தட்ட 500 ரூபாய் வரை ஆகும். இதற்கு ஏற்றபடி அக்கவுன்ட்டில் பேலன்ஸ் வைத்திருந்தால் மட்டுமே FASTag வேலை செய்யும். இல்லையென்றால் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.*

.....................

ஆளுநர் மாற்றம்...!

மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திரு. நமச்சிவாயம் அவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி...!
சாதிவெறி நாராயணசாமி அவர்களை துரத்தும் துரோக அரசியல்...!
2016_ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வன்னியர்கள் இருவரை எதிர் எதிர் துருவங்களாக வைத்து அரசியல் கணக்கு போட்டு ஒருவரை வைத்து இன்னொரு வன்னியத்தலைவர் மாண்புமிகு மக்கள் முதல்வர் NR அவர்களை தோற்கடித்து...!
திரு. நமச்சிவாயம் அவர்கள் முதலமைச்சராக ஆட்சி அமைக்கும் நேரத்தில் தனது நீண்ட நாள் ஆசையாக இருந்த முதலமைச்சர் பதவியை குறுக்கு வழியில் அடைந்தார் வன்னிய இனத்தின் துரோகி நாராயணசாமி......
அதே கணக்கு தான் தற்போது ஆளுநர் மாற்றம்...!
தன்னை( நம்மவர் ) வைத்து தன் சாதிக்கார தலைவர் NR அவர்களை எப்படி சாய்த்தார்..!
அதே பாணியில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஆளுநர் திருமதி, தமிசை சௌந்தர்ராஜன் அவர்களை வைத்து வன்னிய இனத்துரோகி நாராயணசாமி நாடார் அரசை கவிழ்க்க முடிவு...!

காய்நகர்த்தி வருகிறார் நம்மவர்...!

நாம் செய்யும் நம்பிக்கை துரோகம் நிச்சயம் நம்மை ஒரு நாள் வந்து அடைந்தே தீரும்...!

இது தான் இயற்கையின் நீதி...!!
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழிக்கு ஏற்ப மானங்கெட்ட நாராயணசாமி ஆட்சி வீழ்வது ஒட்டுமொத்த பெரும்பான்மை வன்னியர்களின் சாபமே!!!!

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.