வரி வசூல் இலக்கு 25 சதவீதம் அதிகம் tax increase India!
புதுடெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான வரி வசூல் இலக்கை எட்டுவது மிகவும் கடினம் என வருமான வரி துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த நிதியாண்டில் நிகர வரி வசூல் ரூ.14.81, லட்சம் கோடி என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட திருத்திய மதிப்பீட்டின்படி ரூ.14.84 லட்சம் கோடி வரி வசூல் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உண்மையில் வசூல் ஆனது ரூ.13.17 லட்சம் கோடி ரூபாய்தான். அதாவது திருத்திய மதிப்பீட்டை விட ரூ.1.67 லட்சம் கோடி குறைவு.,

இதுபோல், வரி வருவாய், வரிகள் அல்லாத வருவாய் மற்றும் பொதுத்துறை பங்கு விற்பனை போன்றவை மூலம் கிடைக்கும் வருவாய் கடந்த நிதியாண்டில் ரூ.17.30 லட்சம் கோடியாக இருக்கும் என கடந்த பிப்ரவரியில் மதிப்பீடு செய்யப்பட்டது. இது பட்ஜெட் மதிப்பீட்டை விட அதிகம். ஆனால், உண்மையில் வருவாய் ரூ.15.63 லட்சம் கோடியாகவே இருந்தது. தற்போது இந்த இலக்கு 19.63 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு முந்தைய ஆண்டை விட 25.3 சதவீதம் அதிகம். புதிய வரிகள் விதிக்கப்பட்டாலும் இந்த இலக்கை எட்டுவது சற்று கடினம்தான் என வருமான வரித்துறையினர் வட்டாரத்தில் கூறப்படுகிறது..
No comments