Header Ads

Header ADS

விளையாட்டு முகப்பு செய்திகள் விளையாட்டு அணி வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு இருந்தால் இந்திய அணி முதலிடம் பிடித்து இருக்காது: கேப்டன் விராட் கோலி பேட்டி..



டெல்லி;


அணி வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு இருந்தால் இந்திய அணி முதலிடம் பிடித்து இருக்காது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் காரணமாக டெஸ்ட் போட்டிகள் மேலும் பிரபலமடையும். மேலும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி 20 தொடர் இந்திய அணி இளம் வீரர்களுக்கு புதிய களமாக அமையும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெற கவன செலுத்துவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்..

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 , 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் இரண்டு 20 ஓவர் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில்ஸ் பகுதியில் நடக்கிறது. அந்நாட்டில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. வருகிற 3 மற்றும் 4 ந்தேதிகளில் அங்கு போட்டிகள் நடக்கிறது. அதைத்தொடர்ந்து மற்ற ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீஸில் நடக்கிறது..

இதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று இரவு மும்பையில் அமெரிக்கா புறப்பட்டு செல்கிறது. பொதுவாக ஒவ்வொரு தொடருக்கு செல்வதற்கு முன்பு கேப்டன் பத்திரிகையாளர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பு விராட் கோலி நிருபர்களை சந்திக்கமாட்டார் என்று முதலில் தகவல் வெளியானது. அவருக்கும், துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த கேள்வியை தவிர்ப்பதற்காக அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கமாட்டார் என்று கூறப்பட்டது..

இந்நிலையில் இன்று விராட் கோலி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அணி வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு இருந்தால் இந்திய அணி முதலிடம் பிடித்து இருக்காது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் காரணமாக டெஸ்ட் போட்டிகள் மேலும் பிரபலமடையும் என்றும் அவர் கூறியுள்ளார்..



1 comment:

Search This Blog

Contributors

Powered by Blogger.