Header Ads

Header ADS

கொரோனா தடுப்பூசி முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியீடு



கொரோனா தடுப்பூசி முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியீடு

கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியிடப்படும் என ரஷிய சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ:

உலகின் பொது எதிரியாக மாறியுள்ள கொரோனா வைரசை தடுத்து நிறுத்த முதல் தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்துள்ளதாக நேற்று முன்தினம் ரஷியா அறிவித்தது. இது உலக அரங்கில் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மாஸ்கோவில் ரஷிய சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்த தடுப்பூசி தானாக போட்டுக்கொள்ள முன்வருவோருக்கு போடப்படும். ஏற்கனவே ஏறத்தாழ 20 சதவீத டாக்டர்கள் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி தேவைப்படாது” என கூறினார்.

மேலும் அவர் கூறும்போது,“ ரஷிய மக்களின் தேவைக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும். அதே நேரத்தில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். இதற்கான வாய்ப்புகள் உள்ளன”எனவும் குறிப்பிட்டார்.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.