தமிழ்நாட்டில் இன்று 5871 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் இன்று 5871 பேருக்கு கொரோனா உறுதி
தமிழகத்தில் மேலும் 5871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 14 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நோய் தொற்று காரணமாக சென்னையில் 20 பேர் உள்பட 119 பேர் பலியானதால், மொத்த உயிரிழப்பு 5278 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5633 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட 52 ஆயிரத்து 929 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 71 ஆயிரத்து 575 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் 6ஆவது நாளாக 1000க்கும் கீழ் பாதிப்பு குறைந்து, 993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக 439 பேருக்கும்,
திருவள்ளூரில் மேலும் 407 பேருக்கும், கோயம்புத்தூரில் ஒரே நாளல் 294 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
No comments