கர்நாடகாவில் போதைப் பொருள் விற்பனை வழக்கில், நடிகை ராகினி திவேதி உள்பட 12 பேர் மீது வழக்கு..!

கர்நாடகாவில் போதைப் பொருள் விற்பனை வழக்கில், நடிகை ராகினி திவேதி உள்பட 12 பேர் மீது வழக்கு..!
கன்னட திரையுலகை போதைப் பொருள் விவகாரம் ஆட்டிப் படைத்து வரும் நிலையில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ராகினி திவேதி உள்பட 12 பேர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன.
ராகினி திவேதி இவ்வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். முதல் குற்றவாளியாக படத்தயாரிப்பாள் சிவபிரகாஷ் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. டெல்லியில் விரேன் கன்னா என்பவரை கைது செய்த போலீசார் விமானம் மூலம் அவரை பெங்களூருக்கு அழைத்து வந்தனர்.
கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள், பாடகர்களுக்கு இந்த போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. சிங்களவரான ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர்தான் இந்த நடிகர் நடிகைகளுக்கு போதைப் பொருளை சப்ளை செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே நடிகை ராகினியின் ஜாமின் மனு நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.
No comments