Header Ads

Header ADS

176 நாட்களுக்கு பிறகு மீண்டும் சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கம்.. ஏற்பாடுகள் தீவிரம்..!


176 நாட்களுக்கு பிறகு மீண்டும் சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கம்.. ஏற்பாடுகள் தீவிரம்..!

176 நாட்களுக்கு பிறகு மீண்டும் நாளை முதல் மெட்ரோ ரெயில்களை இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதால், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ரெயில்களை இயக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க பயணிகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஒரு முறை ரெயிலில் அதிகபட்சமாக 400 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

தானியங்கி படிக்கட்டுகளிலும் சமூக இடைவெளியை பயணிகள் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே பயணிகள் முக கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதமும், எச்சில் துப்பினால் 100 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று நொய்டா மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.