ரூ.2ஆயிரம் தாள் அச்சிடுவதை நிறுத்த முடிவு செய்யவில்லை - மத்திய அரசு

2000 ரூபாய் தாளை அச்சிடுவதை நிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
2019 - 20-ஆம் ஆண்டில் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை என்றும், 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தும் குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டக் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து ரூபாய் தாள்கள் அச்சிடப்படுவதாகவும், கொரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு பிறப்பித்தன் காரணமாக ரூபாய் தாள்களை அச்சிடும் பணி தற்காலிகமாக பாதிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
No comments