மருத்துவர்களை தாக்கினால்.. 5 ஆண்டுகள் வரை சிறை..! சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்

மருத்துவர்களை தாக்கினால், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வழிவகுக்கும் சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற மாநிலங்களைவியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாநிலங்களவையில், ஹோமியோபதி மத்திய கவுன்சில் திருத்த மசோதா 2020, இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் திருத்த மசோதா 2020 உள்ளிட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு வழியே நேற்று நிறைவேற்றப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக இன்று தொற்று நோய் சட்டத் திருத்த மசோதா 2020ஐ, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தாக்கல் செய்தார். இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள், மசோதா குறித்துப் பேசினர். பின்னர், அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன், தொற்றுநோய் சட்டத் திருத்த மசோதா-2020 நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை தாக்கினால், 5 வருடம் வரை சிறை தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொற்றுநோய் சட்டத்தின் மூலம், மருத்துவர்களை தாக்குவோர், கைதானால், அவர்களுக்கு பிணை வழங்கப்படாமல், 5 ஆண்டுகள் வரை அவர்கள் சிறை தண்டனை அனுபவித்த ஆக வேண்டும்.
தொற்றுநோய் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பேசிய, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, இதுதொடர்பாக அவசர சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர், மருத்துவர்கள், செவிலியர்கள் மீதான தாக்குதல் அடியோடு குறைந்திருப்பதாக குறிப்பிட்டார். இதையடுத்தே, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களை காத்திடும் வகையில், உடனடியாக, சட்டத்திருத்தமும் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments