Header Ads

Header ADS

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!


தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் ஆகியவற்றால் 7 மாவட்டங்களில் கனமழையும், 17 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும். காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், பெய்யக்கூடும். சென்னையில் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக நீலகிரி மாவட்டம் தேவலாவில் 18 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. செப்டம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கும், செப்டம்பர் 09 முதல் செப்டம்பர் 11 வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடாப் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.