Header Ads

Header ADS

ஜப்பானை மிரட்டும் ஹாய்ஷென் சூறாவளி; 8.1 லட்சம் மக்கள் வெளியேற்றம்


ஜப்பானை மிரட்டும் ஹாய்ஷென் சூறாவளி; 8.1 லட்சம் மக்கள் வெளியேற்றம்


ஜப்பானின் தெற்கு பகுதியை நோக்கி ஹாய்ஷென் சூறாவளி நெருங்கி வரும் நிலையில் 8.1 லட்சம் மக்களை அரசு வெளியேற்றி உள்ளது.


ஜப்பான் நாட்டின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதி மாகாணங்களை நோக்கி ஹாய்ஷென் என பெயரிடப்பட்ட சூறாவளி நெருங்கி வருகிறது. இந்த சூறாவளி ஜப்பானின் தெற்கே அமைந்த யகுஷிமா தீவில் இருந்து 70 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து மணிக்கு 35 கி.மீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகருகிறது என அந்நாட்டு வானிலை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


எனினும் இந்த சூறாவளி காற்றின் வேகம் மணிக்கு 162 கி.மீட்டர் இருக்க கூடும் என்றும் மணிக்கு 216 கி.மீட்டர் வரை வேகமெடுக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. இன்று இரவு ஜப்பானின் கியூசூ தீவை சூறாவளி தாக்கும் என கூறப்படுகிறது.


இதனை முன்னிட்டு அங்கிருந்து 8.1 லட்சம் மக்களை அந்நாட்டு அரசு பாதுகாப்பு பகுதிக்கு கொண்டு சென்றுள்ளது. இதேபோன்று ஜப்பானிலுள்ள பிற 10 மாகாணங்களிலுள்ள 55 லட்சம் மக்களையும் வேறு பகுதிகளுக்கு வெளியேறி செல்லும்படி பரிந்துரைத்து உள்ளது.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.