Header Ads

Header ADS

ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி



ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி

ஐபிஎல் தொடரில் ஐதரபாத் அணிக்கு எதிரான போட்டியில், பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஐதராபாத் அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் தேவ்தத் படிக்கல் 56 ரன்களை குவிக்க, பின்ச் 29 ரன்களில் வெளியேறினார்.

20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை சேர்த்தது. டீவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 51 ரன்களைக் குவித்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணியில் பேர்ஸ்டோ 61 ரன்களும், மனிஷ் பாண்டே 34 ரன்களும் சேர்த்தனர்.

அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்ததால் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த ஐதராபாத் அணி தோல்வியடைந்தது.

3 விக்கெட்டுகளை வீழ்த்தி பெங்களூருவின் வெற்றிக்கு வித்திட்ட சஹல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.