Header Ads

Header ADS

வீட்டில் இருந்து தேர்வு எழுதும் மாணவர்கள் ஸ்பீடு போஸ்ட் தவிர்த்து கூரியர் மூலமாகவும் விடைத்தாள்களை அனுப்பலாம் - சென்னை பல்கலைக்கழகம்


வீட்டில் இருந்து இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாள்களை ஸ்பீடு போஸ்ட் தவிர்த்து கூரியர் மூலமாகவும் அனுப்பலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சர்வர் கோளாறு காரணமாக விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யமுடிவதில்லை என்றும், 2 மணிக்கு மேல் தபால்கள் ஏற்கபடாததால் ஸ்பீடு போஸ்ட் அனுப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஸ்பீடு போஸ்ட் தவிர்த்து கூரியர் மூலமாகவும் விடைத்தாள்களை அனுப்பி வைக்கலாம் என்றும், தேர்வு எழுதிய தினத்தன்று விடைத்தாளை அனுப்ப முடியாவிடில் மறுநாள் அனுப்பி வைக்கலாம் என்றும், கல்லூரிகளுக்கு நேரில் சென்று விடைத்தாள்களை ஒப்படைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.