Header Ads

Header ADS

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் எஸ்பிபி..!



கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் எஸ்பிபி..!

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா நோய் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார்.

சென்னை - அமைந்தகரையில் உள்ள MGM மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து, எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி. சரண் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தனது தந்தைக்கு வெண்டிலேட்டர் எடுக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார். அதேநேரம், எதிர் பார்த்த அளவுக்கு, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குணமாகவில்லை என எஸ்.பி.பி.சரண் தெரிவித்தார்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நிலை குறித்து திங்கட்கிழமை நல்ல செய்தி வரும் என ஏற்கனவே எஸ்.பி. பி. சரண் தெரிவித்திருந்தார். இதற்கேற்ப, எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா " நெகட்டிவ் " என வந்தபோதிலும், அவருக்கு நுரையீரலில் ஏற்பட்டுள்ள தொற்று சரியாகவில்லை. எனவே, மருத்துவர்களின் முழு கண்காணிப்பில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.