டாக்டராகும் கனவில் மண் விழுந்துவிட்டதே...!’ - நீட்தேர்வு ஹால் டிக்கெட் வராததால் மாணவி தற்கொலை!

‘டாக்டராகும் கனவில் மண் விழுந்துவிட்டதே...!’ - நீட்தேர்வு ஹால் டிக்கெட் வராததால் மாணவி தற்கொலை!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நீட் தேர்வு எழுதுவதற்கு ஹால் டிக்கெட் வராததால் மனமுடைந்த மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள டி.களபம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் ஹரிஷ்மா பட்டுக்கோட்டையில் உள்ள தனியார்ப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு முடித்துள்ளார். சிறுவயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த ஹரிஷ்மா நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்துள்ளார். நீட் தேர்வு எழுதுவதற்காக ஹரிஷ்மா விண்ணப்பித்துள்ள நிலையில், அவருக்கு இதுவரை ஹால் டிக்கெட் வரவில்லை என்று சொல்லப்படுகிறது.
சக மாணவர்களிடத்தில் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது மற்றவர்களுக்கு ஹால் டிக்கெட் வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் , அதிர்ச்சியடைந்த மாணவி தனது டாக்டர் கனவில் மண் விழுந்து விட்டதாக கூறி பெற்றோரிடத்தில் அழுதுள்ளார். இதன் காரணமாக, மனமுடைந்த நிலையிலிருந்த ஹரிஷ்மா, வயலுக்குத் தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். உயிருக்குப் போராடிய ஹரிஷ்மாவை அவரது குடும்பத்தினர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சை பலனில்லாமல் ஹரிஷ்மா பரிதாபமாக உயிரிழந்தார்.
நீட் தேர்வுக்கு தயாராகியும் ஹால் டிக்கெட் வராத காரணத்தினால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுக்கோட்டை மக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments