தமிழ்நாட்டில் இன்று 5990 பேருக்கு கொரோனா .. 98 பேர் உயிரிழப்பு..!

தமிழ்நாட்டில் இன்று 5990 பேருக்கு கொரோனா .. 98 பேர் உயிரிழப்பு..!
தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 990 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
நோய் தொற்றுக்கு ஒரே நாளில் 98 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 516 ஆக அதிகரித்தது. வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 5 ஆயிரத்து 891 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தனிமைப்படுத்தப் பட்டவர்கள் உள்பட 52 ஆயிரத்து 380 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 25 பேருக்கும், கோவையில் 579 பேருக்கும், கடலூரில் 405 பேருக்கும் , செங்கல்பட்டில் 390 பேருக்கும் , திருவள்ளூரில் 285 பேருக்கும், காஞ்சிபுரத்தில் புதிதாக 133 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
No comments