Header Ads

Header ADS

உக்ரைனில் ராணுவ விமானம் திடீர் விபத்து : பலியா



உக்ரைனில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது.

ராணுவத்துக்கு சொந்தமான சரக்கு விமானத்தில் விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த பயிற்சியின்போது விமானத்தை தரையிறக்க முயன்றபோது திடீரென விபத்தில் சிக்கியது.

இதில் 25 பேர் பலியான நிலையில், 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். விமானம் விபத்துக்குள்ளானபோது சிலர் அதிலிருந்து வெளியே குதித்ததாகவும் கூறப்படுகிறது.

விமானத்திலுள்ள இரட்டை என்ஜின்களில் ஒரு என்ஜின் கோளாறானதே விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.