ஆப்பிரிக்க புலம்பெயர்ந்தோர் படகு கடலில் கவிழ்ந்தது; குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்தோர் சென்ற படகு துனிஷிய கடற்கரை பகுதியருகே கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில், தங்களது நாடுகளை விட்டு ஐரோப்பியா உள்ளிட்ட வேறு நாடுகளை நோக்கி அகதிகளாக புலம்பெயர்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதுபோன்று ஆபத்து நிறைந்த கடல்வழி பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்ட போதிலும் பலர் அதனை கவனத்தில் கொள்வதில்லை.
இந்நிலையில், ஆப்பிரிக்காவின் பல நாடுகளை சேர்ந்த சிலர் படகு ஒன்றில் புறப்பட்டு கடல்வழி பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் சென்ற படகு துனிஷிய கடற்கரை பகுதியருகே ஸ்பாக்ஸ் நகரில் இருந்து சற்று தொலைவில் வந்தபோது திடீரென கடலில் கவிழ்ந்தது.
No comments