Header Ads

Header ADS

19 வயது பெண் கடந்த மாதம் கூட்டு பலாத்காரம், சித்ரவதைக்கு ஆளாகி கொல்லப்பட்டார்.



ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினர் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என குமுறல்


பாதுகாப்பாக இருக்க, டெல்லிக்கு மாற விரும்புவதாக ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த 19 வயது பெண் கடந்த மாதம் கூட்டு பலாத்காரம், சித்ரவதைக்கு ஆளாகி கொல்லப்பட்டார். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட வேண்டும் என்று தங்கள் குடும்பம் விரும்புகிறது என்றார்.

மேலும் தங்கள் குடும்பத்தினரும் டெல்லிக்கு செல்ல விரும்புவதாகவும், பாதுகாப்பாக இருக்க டெல்லிக்கு செல்வதே சரியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இது தொடர்பாக அரசாங்கம் உதவ வேண்டும் என்ற அவர், அரசை சார்ந்து உள்ளதாக அவர் கூறினார்.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.