Header Ads

Header ADS

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்..!



சென்னை மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் ஏற்கனவே இந்த மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினார். அதன்பின்னர் உடல் பரிசோதனைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவக் குழுவின் தொடர் கண்காணிப்பின் மூலம், அனைத்து கதிரியக்கப் பரிசோதனைகளிலும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.