ஃபிளைட்ட புடிச்சி போய் அடிவாங்கிய ஆட்டோகாரர்..! காதலால் கிழிந்தது சட்டை

ஃபிளைட்ட புடிச்சி போய் அடிவாங்கிய ஆட்டோகாரர்..! காதலால் கிழிந்தது சட்டை
சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்று வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டு திண்டுக்கல்லை சேர்ந்த திருமணமான பெண்ணை கடத்திச்செல்ல முயன்றவரை அப்பகுதி மக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அடுத்த கோவுகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் நாகேஷ் இவரின் மகளை அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் முடித்து வைத்து இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நாகேஷின் மகள் மாயமானார், பின்னர் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர் சென்னை சிஐடி நகரை சேந்த தாமரைச் செல்வன் என்ற ஆட்டோ ஓட்டுனர் வீட்டில் இருந்து மீட்டு வந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக வாடகைக் கார் ஒன்றில் தாமரை செல்வன் அடிக்கடி, கோவுகவுண்டம்பட்டிக்குள் வந்து சென்றுள்ளார். சம்பந்தமில்லாத கார் ஒன்று தங்கள் ஊருக்குள் சுற்றி வருவதைக் கண்டு அதனை மறித்து விசாரித்தபோது அதனுள் தாமரைச்செல்வன் இருப்பதை பார்த்ததும், நாகேஷின் உறவினர்கள் அவரை அடித்து உதைத்து சட்டையை கிழித்து காருடன் போலீசில் ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்த போது நாகேஷின் மகளை தான் காதலிப்பதாகவும் ஏற்கனவே அவரை அழைத்துச்சென்று தனது வீட்டில் வைத்து குடித்தனம் நடத்தியதாகவும், அவரை மீண்டும் தன்னுடன் அழைத்து செல்லும் திட்டத்துடன் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து வாடகைக் கார் எடுத்துக் கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.
போலீசார் வழக்கு ஏதும் பதியாமல் அவரை காருடன் சென்னைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது. இந்த தகவல் அறிந்ததும் அந்த ஊர் மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதையடுத்து வடமதுரை போலீசார் திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் நான்கு வழிச்சாலையில் தென்னம்பட்டி பிரிவு அருகே தாமரைச் செல்வனை மடக்கிப் பிடித்து அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து தாமரை செல்வனிடம் விசாரணை நடந்து வருகின்றது.
திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்ணின் மனதை கெடுத்து அழைத்துச் சென்றதோடு அல்லாமல், மனம் திருந்திய அந்த பெண்ணை மீண்டும் கடத்திச்செல்ல முயன்றதால் ஊர்மக்கள் முறையாக கவனித்துள்ளனர்.
No comments