Header Ads

Header ADS

கணவர் குறட்டையிட்டு துக்கம் மனைவி பலாத்காரம்..!


கணவர் குறட்டை மனைவி பலாத்காரம்..! பால் சப்ளை பாய் கைது

சென்னை அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மாடியில் தனி அறையில் வசித்து வந்த காவலாளியின் மனைவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிசிடிவியால் சிக்கிய பால் சப்ளை செய்யும் ஆசாமியின் அட்டூழியம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் உள்ள அறை ஒன்றில் காவலாளி மனைவியுடன் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அடுக்குமாடி குடியிருப்பின் வாசல் பகுதியில் காவலுக்கு இருந்த அசந்து காவலாளி தூங்கிக் கொண்டிருந்த நிலையில், உள்ளே புகுந்த மர்ம ஆசாமி ஒருவன் ஒவ்வொரு குடியிருப்பாக நோட்டம் விட்டுக் கொண்டே அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் காவலாளியின் வீட்டுக்கு சென்று கதவை தட்டியுள்ளான்.

வீட்டில் தனியாக இருந்த காவலாளியின் மனைவி வந்து கதவை திறந்ததும் வீட்டுக்குள் புகுந்த அந்த மர்ம நபர் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வாசலில் தூங்கிக் கொண்டிருந்த கணவனை எழுப்பி கண்ணீர்மல்க விவரித்துள்ளார் அந்த பெண்.


இதையடுத்து இது தொடர்பாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அக்கம் பக்கத்து வீடுகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை முன்னெடுத்தனர். பச்சைகலர் டிசர்ட் அணிந்த ஆசாமி ஒருவன் உள்ளாடையுடன் அங்கு சுற்றி திரிவது தெரியவந்தது.

அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து அக்கம் பக்கத்து வீடுகளின் மதில் சுவர்களில் ஏறிக்குதித்து அங்கு ஏதாவது விலை மதிப்பு மிக்க பொருட்கள் கிடைக்கின்றதா ? என்று தேடிப் பார்த்து பின், அடுக்குமாடி குடியிருப்புக்குள் குதித்து மேல் மாடியில் தனியாக இருந்த காவலாளியின் மனைவியை மிரட்டி பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

விசாரணையில் அவன் அமைந்தகரை கக்கன்ஜி நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பதும் அந்த பகுதியில் வீடு வீடாக பால் பாக்கெட் போடும் வேலைபார்த்து வந்த போது ஆளில்லாத வீடுகள், பெண்கள் தனியாக இருக்கும் வீடுகள் போன்றவற்றை நோட்டமிட்டு கைவரிசை காட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பலாத்கார கொள்ளையன் ராமகிருஷ்ணனை கைது செய்த காவல்துறையினர் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காவலாளி பணியில் இருக்கும்போது தூங்கினால், அவர்கள் காவல் காக்கும் இடத்திற்கு பேராபத்தாகி விடும் என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர், சிசிடிவி காட்சிகள் இருந்ததால் இந்த சம்பவத்தில் தொடர்புடையவனை விரைவாக கைது செய்ய முடிந்தது என்கின்றனர்.

No comments

Search This Blog

Contributors

Powered by Blogger.